Monday, June 7, 2010

ஓம் நமச்சிவாய

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்டவித்தக விநாயக விரைகழல் சரணே!




பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய்மறந்தாலும்

உற்றதேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே.
பொருள்:
பெற்றதாயை பிள்ளை மறந்து விட்டாலும், அல்லது தாய் தன் பிள்ளையை மறந்து விட்டாலும், உயிர் தன் உடம்பை மறக்க நேர்ந்தாலும், அல்லது உயிரினை இவ்வுடல் மறந்து விட்டாலும், படித்த கலைகளை மனம் மறந்து விட்டாலும், கண்கள் இமைக்கும் குணத்தை மறந்துவிட்டாலும், நல்ல தவஞானிகள் மனதில் வீற்றிருந்து அருள்கின்ற சிவபெருமானை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

No comments:

Post a Comment