என்றோ எழுதிய கவிதை ?!
குளிர் பொதிகை யருவிதனில் குளித்து - ஆங்கே
குறும் பலவீசர் சீரடி பணிந்து
மிளிர் குன்றின் வளங்கண்டு களித்து
மென்னகை புரிந்து மெல நடந்து
துளிர் சிந்து தேம்பலாமாங் கனியின்
தீஞ்சுவை யுண்டு சுமந்து கொண்டு
தளிர் விட்ட தருக்களின் தண்ணிழலில்
தனைமறந் தயர்ந்துறங்கி விழித்துப் பின்னர்
எழிற் சிந்தும் பூம்பொழிற் புகுந்து
மாமகரந்த மணமுண்ணும்
தொழிற் புரிந்துபின் நீயுண்ட செந்
தேன் சிந்த தெம்மாங்கு பாடி என்றும்
தெற்கிருந்து மெல்லச் சாடி வருந் தென்றலே
ஏன் இன்று இன்னமும் வாராதென்னை
ஏங்க வைத்து ஏமாற்று கின்றனையோ?
- இளங்கண்ணன்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment